Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக வேளாண்துறை நிதிநிலை அறிக்கை 2022-2023 இன்று தாக்கல்!

    தமிழக வேளாண்துறை நிதிநிலை அறிக்கை 2022-2023 இன்று தாக்கல்!

    நேற்று அனைத்து துறைக்கும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வேளாண்துறை நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. 

    இதனை வேளாண்துறை அமைச்சரான எம் ஆர் கே பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக தாக்கல் செய்கிறார். மேலும் இந்த தாக்கலும் காகிதமில்லா முறையிலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை பத்து மணிக்கு தமிழக சட்டசபையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடங்கியது. 

    ஏற்கனவே வேளாண்துறை அமைச்சர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தி விவாசாயிகளின் குறைகள் மற்றும் தேவைகள் தெரிந்துக்கொள்ளப்பட்டன. அதனால் மிக முக்கியமாக விவசாயிகளின் நலனுக்கு ஏற்றார்ப் போல் திட்டங்களுக்கு நிதிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    குறிப்பாக, விவசாயிகள் பயிர்க்கடன், உங்களுக்கான மானியங்கள், ஆறுகள் இணைப்பு மற்றும் பாசனைக் கால்வாய்கள் தூர்வாருதல், விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல், பண்ணை வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    தற்போது அளித்த அறிக்கையின் படி, 

    • வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி 
    • இயற்க்கை விவசாய திட்டத்திற்கு ரூ.400 கோடி 
    • மரம் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.12 கோடி 
    • பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு ரூ.2,399 கோடி 
    • வேளாண்மை படித்த 200 இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க தலா ரூ. 1 லட்சம்.
    • வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துக்கொள்ள ‘செயலி’ உருவாக்கப்படும் என்று அறிவிப்பு.
    • மாவட்ட, மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்று அறிவிப்பு.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....