Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்மலிவு விலையில் மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தும் சாம்சங் !

    மலிவு விலையில் மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தும் சாம்சங் !

    ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக இருக்கும் சாம்சங் புதிய சாம்சங் 7 நியூ மடிக்கணினிகளை அறிமுகம் செய்து வருகிறது. 40,000 ரூபாய்க்கும் குறைவான மடிக்கணினியான கேலக்சி புக் கோ மடிக்கணினியையும் இதனோடு புதிதாக அறிமுகம் செய்கிறது. 

    சாம்சங் நிறுவனம் நடத்தும் கேலக்சி ஈவென்ட்டில், கேலக்சி 7 வரிசை மடிக்கணினிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது அந்நிறுவனம். இதில் கேலக்சி புக்  2, கேலக்சி புக் 2 புரோ, கேலக்சி புக் 2 புரோ 360, கேலக்சி புக் 2 பிசினஸ் ஆகிய மடிக்கணினிகள் அறிமுகமாக உள்ளது. பல்வேறு விலைகளில் வெளியாக இருக்கும் இந்த மடிக்கணினிகளில் இன்டெல் நிறுவனத்தில் 12வது ஜெனரேஷன் புராசஷர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 40,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் சாம்சங் கேலக்சி புக் கோ மடிக்கணினியும் இதனுடன் வெளியாகிறது. இந்த அனைத்து மடிக்கணினிகளிலும் நவீன விண்டோஸ் 10 எஸ் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 

    சாம்சங் கேலக்சி புக் 2 புரோ 360 ரூபாய் 1,15,990 க்கும், சாம்சங் கேலக்சி புக் 2 புரோ ரூபாய் 1,06,990 க்கும், சாம்சங் கேலக்சி புக் 2 360 ரூபாய் 99,990 க்கும், சாம்சங் கேலக்சி புக் 2 ரூபாய் 65,990 க்கும் மற்றும் சாம்சங் கேலக்சி புக் 2 பிசினஸ் 1,04,990 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. மலிவு விலை ரகமான சாம்சங் கேலக்சி புக் கோ 38,990 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

    சாம்சங் அறிவித்திலேயே மிகவும் மலிவு விலை மடிக்கணினியான சாம்சங் கேலக்சி கோ-வில் .விண்டோஸ் 11 மென்பொருளோடு, மிலிட்டரி கிரேடு டியூரப்பிலிட்டியும் உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7சி ஜென் 2 புராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே மிகவும் மெல்லிய 14 இன்ச் டிஸ்பிளே ஆகும். மேலும், இதில் சத்தத்திற்கு டால்பி அட்மாஸ் சிஸ்டமும் உள்ளது. மற்ற மடிக்கணினிகளும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மற்றும் மிகவும் கவர்ச்சியான டிஸ்பிளேக்களுடன் களமிறங்குகின்றன. இந்த மடிக்கணினிகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வாங்க விருப்பம் உள்ளவர்கள் சாம்சங் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை தளத்தில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....