Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாலில் ஜல்லிக்கற்களோடே தையல் போட்ட மருத்துவர்! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்...

    காலில் ஜல்லிக்கற்களோடே தையல் போட்ட மருத்துவர்! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்…

    புதுக்கோட்டையில் விபத்தில் காயமடைந்தவரின் கணுக்காலில் ஜல்லி கற்களை அகற்றாமல் மருத்துவர்கள் தையல் போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் மதிவாணன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதியுள்ளார். 

    இந்த மோதலின் போது, சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் மீது மதிவாணன் விழுந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட மதிவாணன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

    இதையும் படிங்க : நாய்க்கு மருத்துவர் செய்த கொடுமை; உயிரை காப்பாற்றிக்கொள்ள படாத பாடுபட்ட நாய்

    அப்போது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு தையல் போடப்பட்டது. இருப்பினும் வலி அதிகமானதால் தனியார் மருத்துவமனையை மதிவாணன் நாடியுள்ளார். அப்பொழுது அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் தையல் போட்ட இடத்திற்குள் சிறிய ஜல்லி கற்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. 

    இந்த தகவல் வெளியே தெரிந்ததும் மதிவாணன் அதிர்ச்சிக்குள்ளானார். பிறகு உடனடியாக தையல் பிரிக்கப்பட்டு உள்ளே இருந்த ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....