Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இங்கிலாந்தில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி..தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை விளக்கும் நிகழ்வுகள் பங்கேற்பு...

    இங்கிலாந்தில் சர்வதேச சுற்றுலா கண்காட்சி..தமிழ்நாட்டின் பாரம்பரியங்களை விளக்கும் நிகழ்வுகள் பங்கேற்பு…

    இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் 2022 உலக சுற்றுலா சந்தை (World Travel Market-2022 )-யில் தமிழ்நாடு சுற்றுலா அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்.

    ஒரு நாட்டின் அந்நிய செலவாணி உயர்வில் ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகின்றது. கொரோனா கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ளது.

    இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை விளங்கி வருகின்றது. சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடத்தினார்.

    இதன் காரணமாக மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் உலகளவில் அதிக முக்கியத்துவம் பெற்று இந்தியாவின் முன்னணி சுற்றுலாத்தலமாக தற்போது விளங்கி வருகின்றது. தற்போது தமிழ்நாட்டின் பண்டைய மன்னர்களின் அரண்மனைகள், வரலாறு குறித்த கல்வெட்டுகள் ஆகியவற்றை இணையதளங்கள் வழியாகவும், நேரில் பார்வையிட்டும் தெரிந்து கொள்ள இலட்சக்கணக்கான மக்கள் விரும்புவதால் தஞ்சையை சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சிறப்பு சுற்றுலா பயண ஏற்பாடுகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மெக்ஸிக்கோவில் சென்ற 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பறக்க விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பலூன்களில் சிறப்பு அம்சமாக இந்திய சுற்றுலாத்துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் மற்றும் தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களின் பெருமையை நிலைநிறுத்தும் விதமாகவும் இந்திய தேசியக்கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட பலூனில் சுற்றுலாத் துறையின் முத்திரைகளான, ‘incredible india’ மற்றும் ‘enchanting tamil nadu’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு பறக்க விடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து நாட்டில் மக்களிடையே தமிழ்நாடு சுற்றுலா தலங்களின் சிறப்புகளை கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் 2022 நவம்பர் – 7,8,9 தினங்களில் நடைபெற்ற உலக சுற்றுலா சந்தை – 2022 (World Travel Market-2022 )-ல் தமிழ்நாடு சுற்றுலா அரங்கினை 07.11.2022 அன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார்.

    இந்த அரங்கில் தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையிலான கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வரங்கில் தமிழகத்தின் சுற்றுலா தொழில் முனைவோர்களான விடுதி மற்றும் உணவகம் நடத்துபவர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சுற்றுலா (Plantation Tourism) மேம்பாட்டு அமைப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    05.11.2022 அன்று ஸ்காட்லாந்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் மூலம் Road Show நடத்தப்பட்டது.ஸ்காட்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பரத நாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், தமிழ்நாட்டின் சுற்றுலா சார்ந்த திட்டங்கள் மற்றும் தகவல்கள் தூதரகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

    இந்திய தூதரக உயர் அலுவலர்கள், ஸ்காட்லாந்து வாழ் தமிழர்கள், மருத்துவர்கள், தொழில் முனைவோர், சுற்றுலா, வரலாறு மற்றும் காலநிலை மாறுபடும் ஆய்வு மேற்கொள்ளும் ஆர்வலர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள். இந்நிகழ்வில் ஸ்காட்லாந்தில் உள்ள சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், முகவர்கள் மற்றும் சுற்றுலா அமைப்பாளர்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா சுற்றுக்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் சுற்றுலாக்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஸ்காட்லாந்து பிராந்திய பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    மேலும் வடக்கு அயர்லாந்திலும் தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா Road Show நடத்தப்பட்டன. இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் தமிழ்ச் சங்கங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்கள் குறித்து விளக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்தரமோகன் அவர்கள், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு வடநேரே ஆகியோர் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: கானா பாடலின் வாயிலாக சாலை விழிப்புணர்: அரசு பள்ளி மாணவியின் வித்தியாச முயற்சி..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....