Saturday, March 23, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'ரசிகர்களே, விஜய்யின் குட்டிக்கதையை கேட்க தயாரா?' - வெளிவந்த 'வாரிசு' அப்டேட்..

    ‘ரசிகர்களே, விஜய்யின் குட்டிக்கதையை கேட்க தயாரா?’ – வெளிவந்த ‘வாரிசு’ அப்டேட்..

    வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுகிறது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 

    இச்சூழலில்தான், தீபாவளியை முன்னிட்டு வாரிசு திரைப்பட பாடல் வெளிவரும் என்று தகவல் வெளியானது. ஆனால், தீபாவளி அன்று பாடல்கள் எதுவும் வெளியாகாமல், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்தன. வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இருப்பினும், திரைப்படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட வண்ணமை இருந்தனர். இதைத்தொடர்ந்துதான், விஜய் மற்றும் மானசி குரலில் வெளிவந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்களை அதிரிபுதிரியாக கவர்ந்து வருகிறது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் மாதம் 24-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், தற்போது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவுப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டிக்கதை ஒன்றை நடிகர் விஜய் கூறுவது வழக்கம். அந்த குட்டிக்கதைக்காகவே அவரின் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்கவக்ஃபு போர்டு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்டு தர வேண்டும்: தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வேண்டுகோள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....