Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்கானா பாடலின் வாயிலாக சாலை விழிப்புணர்: அரசு பள்ளி மாணவியின் வித்தியாச முயற்சி..!

    கானா பாடலின் வாயிலாக சாலை விழிப்புணர்: அரசு பள்ளி மாணவியின் வித்தியாச முயற்சி..!

    கானா பாடலின் வாயிலாக சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு பள்ளி மாணவி ஒருவர் மிக அழகாக பாடிய காணொளி ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஜாய்ஸ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி சீருடை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கானா பாடல் ஒன்றை பாடியிருந்தார்.

    இந்த காணொளி தற்போது பலராலும் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி யார்? எங்கே இருக்கிறார்? என்பதை பற்றிய தகவலை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் கேட்டிருந்தார்.

    இந்நிலையில், அந்த சிறுமியின் தகவல் கிடைத்து அவரை தேடி கண்டுபிடித்து சென்னைக்கு வரவழைத்து, டிஜிபி சைலேந்திர பாபு நேரில் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில், ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாடல் பாடிய இளங்குயிலே கண்டுபிடித்து விட்டோம். 13 வயது ஜாய்ஸ். அவரின் கனவு நினைவாக வாழ்த்துக்கள், என அந்தக் காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: மதிய உணவில் தரமில்லை..! சுவைத்து பார்த்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய அமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....