Monday, May 6, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த வருகிறது தேர்வு; வெற்றிப் பெற்றால் உதவித்தொகை!

    தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்த வருகிறது தேர்வு; வெற்றிப் பெற்றால் உதவித்தொகை!

    தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. 

    தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பின்படி, 

    இந்தத் தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 

    இந்த இலக்கிய திறனறிவு தேர்வில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்துக்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். 

    மேலும், 2022-23-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்கள், வருகிற அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

    இந்த தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, மாணவர்கள் இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

    பின்பு, வருகிற ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 9-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50-ஐ சேர்த்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். 

    இவ்வாறு, அரசு தேர்வுத்துறை அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மீன்வளத்துறையில் இவ்வளவு காலிப்பணியிடங்களா? டிகிரி முடித்தவர்கள் விரைவில் விண்ணப்பியுங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....