Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதன் காதலியை மணக்க இலங்கை வரை சென்ற தமிழ்ப்பெண்!

    தன் காதலியை மணக்க இலங்கை வரை சென்ற தமிழ்ப்பெண்!

    தமிழகத்திலிருந்து சென்ற பெண்ணும் அவருடைய இலங்கை காதலியும், பல காலமாக சமூக வலைத்தளம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். இலங்கை காதலிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தமிழகப் பெண், கடந்த 20 ஆம் தேதி இலங்கை காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு, இருவரும் திருமணம் செய்ய நினைத்துள்ளனர். இதனை குடும்பத்தார் மறுத்தால், இலங்கை காதலி தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக கூறியுள்ளார். 

    இதனிடையே, தமிழகத்திலிருந்து சென்ற பெண்ணுடைய இலங்கை காதலியின் தந்தை அளித்த புகாரின் பேரில், இரு பெண்களையும் இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, கடந்த 22 ஆம் தேதி நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

    தமிழகத்திலிருந்து தனது இலங்கை காதலியை திருமணம் செய்துக் கொள்ள இலங்கை சென்ற 24 வயதுடைய பெண்ணும், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அவரது காதலியும் இலங்கை, அக்கரைப்பட்டு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், விளக்க மறியல் எனப்படும் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தனர். 

    இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கல்முனை மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு, மனநல மருத்துவ அறிக்கையினைப் பெற்றதும் நேற்று 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. 

    இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், இலங்கையில் பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குற்றம் எனவும், சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவ்வாறான திருமணத்திற்குரிய சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை எனவும் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை சென்ற தமிழகப் பெண், இலங்கையின் குடிவரவு – குடியகல்வு (Immigration & Emigration Law) சட்டத்தை மீறும் வகையில் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி, அவரை சொந்த நாட்டிற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும் இந்த வழக்கின், முதல் சந்தேக நபரான இலங்கை காதலியை, இலங்கை மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுவித்துள்ளது. தொடர்ந்து, இலங்கை காதலியை நாளை நீதிமன்றத்தில் நிறுத்தவும் அதுவரை, அந்தப் பெண்ணின் குழந்தையுடன் பாதுகாப்பாக காப்பகத்தில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறும் இலங்கை; வீட்டிலிருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு அறிவிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....