Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

    ராஜா அண்ணாமலை புரம் குடிசைப்பகுதியை இடித்து அகற்ற, அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

    சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரின் இளங்கோ தெருவில் உள்ள குடிசைகளை 4 வாரங்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. 

    அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தமிழக வழக்கறிஞர், ஆர்.ஏ.புரம் குடிசைப்பகுதியை இடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவாதித்தார்.  மேலும் தீ குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டதால், குடிசைகளை அகற்ற அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் விவாதம் செய்தார். 

    அந்த சமயத்தில் நீதிபதிகள் குறுக்கிட்டு, அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். குடிசைப்பகுதியை 4 வாரங்களுக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    மேலும், இந்த உத்தரவை தவறிவிட்டால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் உயர் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

    தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூலை 18ம் தேதி திறப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....