Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை- உச்சநீதிமன்றம்

    நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை- உச்சநீதிமன்றம்

    இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்குகளின் அடிப்படையில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

    பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தொலைக்காட்சியில், இறைத் தூதர் நபிகள் நாயகம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியது. மேலும், அவரின் கருத்துக்கு பல்வேறு கண்டனங்களும் எழுந்தது. மத உணர்வை புண்படுத்தியதற்காக இவரின் மீது வழக்குகளும் தொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், தன்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்வதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 18) மனு தாக்கல் செய்தார். 

    நுபுர் ஷர்மாவின் மனு மீது ஜூலை 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. 

    நுபுர் ஷர்மாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு, தில்லி காவல்துறை, மராட்டியம், மேற்கு வங்கம், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநில அரசுகள் பதிலளிக்கவும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், ஆகஸ்ட் 10ம் தேதி வரை நுபுர் ஷர்மா மீது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....