Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்

    பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்

    பிரபல சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ கே.கே.ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். 

    ஜூடோ கே.கே.ரத்னம் தென்னிந்திய திரையுலகின் முக்கியமான சண்டைப் பயிற்சி இயக்குநராக திகழ்ந்தவர். 70 மற்றும் 80-களில் இவர் சண்டைப் பயிற்சி இயக்குநராக தனி முத்திரையே பதித்தார். 

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக ஜூடோ கே.கே.ரத்னம் பணியாற்றியுள்ளார். 

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ கே.கே.ரத்னம் பல இயக்குநர்களின் விருப்ப சண்டைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்த் -ஜூடோ கே.கே.ரத்னம் கூட்டணி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தார். 

    இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று ஜூடோ கே.கே.ரத்னம் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    சூர்யகுமாரை சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவித்த ஐசிசி; சிராஜ் முன்னேற்றம், கோலி பின்னடைவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....