Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசூர்யகுமாரை சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவித்த ஐசிசி; சிராஜ் முன்னேற்றம், கோலி பின்னடைவு!

    சூர்யகுமாரை சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவித்த ஐசிசி; சிராஜ் முன்னேற்றம், கோலி பின்னடைவு!

    இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஒருநாள் தொடரில், சுப்மன் கில் 360 ரன்கள் எடுத்தார். சிராஜ் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

    இந்நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் முதலிடத்தில் இருந்த டிரெண்ட் போல்டைப் பின்னுக்குத் தள்ளி சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார் . சிராஜ் முதல்முறையாக இந்தப் பெருமையை பெற்றுள்ளார். அதேபோல, பேட்டர்களுக்கான ஒருநாள் போட்டி தரவரிசையில் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 6-ம் இடத்தைப் பிடித்துள்ளார் இளம் வீரர் சுப்மன் கில். 

    மேலும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இருபது ஓவர் போட்டியில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    32 வயதான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக 45 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி, 1578 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 31 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 2 சதங்களுடன் 1164 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இருபது ஓவர் தரவரிசையில் 900 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

    மசாலா கலந்த ஓவியத்தை வரைந்து சாதனை; சென்னையை சேர்ந்த கலைஞர் அசத்தல் சாதனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....