Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பாம்பு பிடி தொழிலாளர்களுக்கு பத்ம ஶ்ரீ!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பாம்பு பிடி தொழிலாளர்களுக்கு பத்ம ஶ்ரீ!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பாம்பு பிடி தொழிலாளர்களுக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் 362 பேர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். 

    இந்த உறுப்பினர்கள் சென்னேரி, பழைய பெருங்களத்தூர், புதிய பெருங்களத்தூர், வேம்பேடு, காயார் ஆகுல வனப்பகுதிகளில் இருந்து கொடிய விஷமிக்க பாம்புகளை பிடித்து, அவற்றின் விஷத்தை எடுத்துவிட்டு, மீண்டும் அவற்றை அவ்வனப்பகுதிகளிலேயே விட்டு விடுகின்றனர். 

    இதில், உறுப்பினர்களாக இருக்கும் வடிவேலு மற்றும் மாசி ஆகியோர் கொடிய விஷமிக்க பாம்புகளை பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் அமெரிக்கா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சென்று ஆபத்தான கொடிய விஷமிக்க பாம்புகளையும் பிடித்துள்ளனர். 

    இந்நிலையில், பாம்பு பிடித்து சாதனை படைத்து வரும் வடிவேலு மற்றும் மாசி இருவருக்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இருளர் பழங்குடியின மக்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக இருளர் மக்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். 

    சூர்யகுமாரை சிறந்த கிரிக்கெட் வீரராக அறிவித்த ஐசிசி; சிராஜ் முன்னேற்றம், கோலி பின்னடைவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....