Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தெரிந்த எவரெஸ்ட்; தெரியாத கதைகள்.....இன்று வரை நீடிக்கும் மாயம்!

    தெரிந்த எவரெஸ்ட்; தெரியாத கதைகள்…..இன்று வரை நீடிக்கும் மாயம்!

    உலகத்தின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த எவரெஸ்ட் சிகரத்தினை ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு பெயரில் அழைக்கின்றனர்.

    உதாரணமாக, நேபாளத்தில் சாகர்மாதா என்றும், திபெத்தில் சோமோலுங்க்மா மற்றும் சீன மொழியில் கியோமோலுங்மா என்றும் அழைக்கப்படுகிறது. 29,035 அடி (8,850 மீட்டர்) உயரத்தில் மிகப்பிரம்மாண்டமாக நிற்கும் இந்த எவரெஸ்ட், சாகச விரும்பிகள் பலருக்கும் சொர்க பூமியாய்த் திகழ்கிறது.

    பல்வேறு இக்கட்டுகளும், ஆபத்துகளும் இந்த மலையேற்றத்தில் இருந்தாலும், அனைத்தையும் மீறி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியினை அடைவது என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

    அப்படி ஒரு கனவினைக் கொண்ட மனிதன் 1921ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தினை நோக்கிச் சென்றான்.. சரித்திரமும் படைத்தான் என்றே கூற வேண்டும்..

    ஜியார்ஜ் மல்லோரி..

    1886ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி பிறந்த ஜியார்ஜ் மல்லோரி என்னும் இங்கிலாந்தினைச் சேர்ந்த நபர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையினை ஏறும் முயற்சியில் ஈடுபட்டார்.

    சிறுவயதிலிருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட மல்லோரி, ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் தனது மலையேற்றத்தினைத் தொடங்கினார்.

    அவர் காலத்தில் இருந்த பல மலையேற்றம் செய்பவர்களின் மத்தியில் தனது பூனை போல மலை ஏறும் திறமையினாலும், புதிய பாதைகளைக் கண்டறிந்து அப்பாதைகளில் வெற்றிகரமாக பயணம் செய்யும் திறமையினாலும் மல்லோரி மிகவும் பிரபலமானவராக இருந்தார். 

    இங்கிலாந்தின் மிகவும் புகழ்பெற்ற அல்பைன் குழுவில் ஒருவராய் மல்லோரி இருந்தார். 

    எவரெஸ்ட் மலையேற்றம்..

    1921ம் ஆண்டு அல்பைன் குழுவானது எவரெஸ்ட் மலையினை ஏறும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட அணியில் மல்லோரியும் இடம்பெற்றார். 

    1921ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தினை பரிசோதிப்பதற்காக சென்ற இந்த குழுவிற்கு மலையேற்றப் பாதையினைக் கண்டறிய மல்லோரி மற்றும் அவரது பள்ளி நண்பர் புல்லக் என்பவரும் சென்றனர்.

    ஜியார்ஜ் மல்லோரி (நிற்பவர்களின் இடமிருந்து இரண்டாவதாக உள்ளவர்). மூன்றாவது மலையேற்றத்திற்கு முன் எடுத்த படம்.

    அந்த வருடம் செப்டம்பர் மாதம் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட அந்த குழுவானது, அதீத காற்று வீசியதால் பின்னடைய நேரிட்டது.

    1922ம் ஆண்டு இரண்டாவது முறையாக எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்ட குழுவிலும் மல்லோரி இடம்பெற்றார். ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கொண்டு மலையேறும் முயற்சியில் இம்முறை ஈடுபட்டனர்.

    ஆக்சிஜன் துணை இன்றி 8,230 மீட்டர் வரை ஏறிய மல்லோரி குழுவானது அதற்கு மேல் செல்ல முடியாமல் போனது. பனிச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் குழுவில் உள்ள ஏழு பேர் இறந்து போனதே அதற்கு காரணம். 

    1924ம் ஆண்டு மூன்றாவது முறையாக மலையேறும் முயற்சியில் ஈடுபட்ட மல்லோரி மற்றும் ஆன்ட்ரியூ இர்வின் என்கிற அவரது மலையேறும் நண்பரும் திரும்ப வரவில்லை.

    ஜூன் ஆறாம் தேதி தங்களது கடைசி கேம்பினில் இருந்து மலை உச்சியை அடையும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டனர். எவரெஸ்ட் சிகரத்தின் கடைசி கேம்ப் 8,170 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுமார் 600 மீட்டர் உயரத்தில் மலை உச்சி உள்ளது.

    ஜூன் எட்டாம் தேதி எவரெஸ்ட் சிகரத்தினை ஏறிய மற்றொரு குழுவினர் மல்லோரி மற்றும் இர்வின் மலை உச்சியினை நோக்கி ஏறுவதை பார்த்ததாய்க் கூறியுள்ளனர். மல்லோரி மற்றும் இர்வின் இறுதியாகப் பார்க்கப்பட்டது அன்று தான். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டவர்கள் எவரும் இல்லை. மல்லோரி மற்றும் இரவின் மலை ஏறும் முயற்சியில் தங்களது உயிரைத் தொலைத்தனர்.

    மல்லோரி மற்றும் இர்வின் தொலைந்த தினத்திலிருந்து அவர்களது மலையேற்றம் முக்கிய விவாதப்பொருளாக பல காலத்திற்கும் இருந்தது. அதிலும் அவர்கள் இருவரும் மலை உச்சியினை அடைந்தார்களா இல்லையா என்பது தெரியாமலே இருந்தது.

    அவரது கடைசி முயற்சிக்கு முன்பு நீங்கள் ஏன் இவ்வளவு இவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த மலையேற முயற்சிக்கின்றீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில்..,

    ஏனென்றால் அது அங்கு இருக்கிறது.’ என்ற ஒற்றை வரி மட்டும் தான்.

    மல்லோரி இறந்த பின்பு பல ஆண்டுகளாக அவரது உடல் கிடைக்கவில்லை. அப்படிக் கூறுவதை விட அவருக்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு அந்த சிகரத்தின் மேல் யாரும் ஏறவில்லை என்றே கூற வேண்டும்.

    மல்லோரி மற்றும் இர்வின் பயன்படுத்திய கோடரி, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பல உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டாலும் அவர்களது இரு உடல்களும் கிடைக்கவில்லை. சிகரத்தின் உச்சியினை அவர்கள் இருவரும் அடைந்தார்களா இல்லையா என்பதே தெரியாமலிருந்தது.

    பதில் இல்லாத கேள்விகள்..

    1975ம் ஆண்டு ஒரு சீன மலையேறுபவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஒருவரின் உடலினைப் பார்த்ததாகக் கூறினார். மேலும் 1991ம் ஆண்டு, 1920 ஆண்டு பயன்படுத்திய ஆக்சிஜன் குப்பி ஒன்றும் கண்டறியப்பட்டது.

    இந்த தடயங்களை வைத்து 1991ம் ஆண்டு மல்லோரி மற்றும் இர்வினைத் தேடி எவரெஸ்ட் சிகரத்திற்கு ஒரு குழு புறப்பட்டது. 8,155 மீட்டர் உயரத்தில் மல்லோரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

    8,155 மீட்டர் உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மல்லோரியின் உடல். அவரது சட்டை காலரில் ஜியார்ஜ் மல்லோரி என்று பொறிக்கப்பட்டிருந்ததை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மலையுச்சியினை அடைந்த மல்லோரி இறங்கும் போது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றே அனைவராலும் கருதப்பட்டது. அவரது மலையேறும் நண்பரான இர்வினின் உடல் இன்று வரைக் கண்டறியப்படவில்லை. 

    மல்லோரியின் கேமரா கிடைத்தால் அனைத்து குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அவர்கள் உபயோகப்படுத்திய கத்தி, கடிதங்கள் போன்ற பொருட்களே கிடைத்தது. ஆனால் இன்றுவரை மல்லோரி எடுத்துச் சென்ற கேமரா கிடைக்கவில்லை. 

    எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மனிதர் யார் என்ற விவாதம் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. உலகில் இருக்கும் விடைதெரியா பல கேள்விகளில் மல்லோரி மற்றும் இர்வினுடைய எவரெஸ்ட் மலையேற்றமும் ஒன்றாக காலத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓரு கால் முழுவதும் சிதைந்த நிலையில் மற்றொரு காலில் அவரது ஷூ இன்றுவரை உள்ளது.

    மல்லோரியின் உடலினைக் கண்டறிந்த மலையேறும் வீரர்கள், அவர் இறந்த இடத்திலேயே இறுதிச் சடங்கினை செய்துள்ளனர். 8,155 மீட்டர் உயரத்தில் இன்றும் மல்லோரியின் உடல் எவரெஸ்ட் சிகரத்தினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மல்லோரி உண்மையில் எவரெஸ்ட் சிகரத்தின் மலை உச்சியினை அடைந்தாரா? உடன் சென்ற இர்வின் என்னவானார்? அவரது கேமரா எங்கே சென்றது? என அனைத்துக் கேள்விகளுக்குமான பதில் எவரெஸ்ட் சிகரத்திற்குள்ளேயே புதைந்து கிடைக்கிறது. காலம் நினைத்தால் மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலினை அளிக்கலாம்.. ஆனால் காலம் நினைக்கவும் ஒரு காலம் வரவேண்டுமல்லவா? பதில் சொல்லுமா.. காலம்?? தன்னுள் புதைந்துள்ள உண்மைகளை உலகிற்கு சொல்லுமா.. எவரெஸ்ட் சிகரம்..??

    அடுத்த மூன்று நாட்களுக்கு தென்மேற்கு பருவமழையில் குளிரப்போகும் மாவட்டங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....