Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோவிலுக்குள் நுழைந்த பாம்பு; ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மக்கள்!

    கோவிலுக்குள் நுழைந்த பாம்பு; ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மக்கள்!

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பழமை வாய்ந்த கோயில்கள் எண்ணில் அடங்காமல் இருக்கிறது. அதில் பல கோயில்கள் உலகப் புகழ் பெற்றவை. நிம்மதியைத் தேடி பொதுமக்கள் கோயில்களுக்கு தினந்தோறும் அல்லது வாரந்தோறும் வருவது வழக்கம். கோயில்களை நாடி வந்தால் பிரச்சனை தீருமோ இல்லையோ, ஆனால் மன நிம்மதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில், சாமி தரிசனத்திற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலுக்குள் பாம்பு ஒன்று வந்த சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிபுரம் நகராட்சி. இந்த நகராட்சிக்குட்பட்ட இராசிபுரம் பிரிவு சாலைப் பகுதியில், பழம்பெரும் கோயிலான ஸ்ரீ சொக்கலப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்காக வருவதுண்டு. குறிப்பாக, செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமையான நேற்று காலையிலும், கோயிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அந்த சமயத்தில், கோயில் வளாகத்திற்குள் பாம்பு வந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், சிறுது நேரம் கோயிலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனே அப்பகுதி மக்கள், ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர், தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாகப் போராடி 6 அடி நீளமிருந்த சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

    பாம்பை மீட்ட பிறகு, தீயணைப்புத் துறை வீரர்கள் ஆத்தூர் வனத்துறையிடம் அப்பாம்பை ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பை பெற்றுக்கொண்ட வனத்துறையினர், ஐயங்கார் காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர். கோயில் வளாகத்திற்குள் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்ட பிறகு, கோயிலுக்கு வந்த பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

    அதிகரிக்கும் செலவினங்கள்….இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....