Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சேகர் பாபுவை ஸ்நேக் பாபு என விமர்சித்த எச்.ராஜா; நடந்தது என்ன?

    சேகர் பாபுவை ஸ்நேக் பாபு என விமர்சித்த எச்.ராஜா; நடந்தது என்ன?

    தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சேகர்பாபு. இவர் பொறுப்பேற்ற பிறகு, பல கோயில் நிலங்களை மீட்டுள்ளார். மேலும், இந்துக் கோயில்கள் சார்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சரை, பாஜக மூத்த தலைவரான எச். ராஜா ஸ்நேக் பாபு என விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    யூடியூபரும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் கோபிநாத் இணையதளம் வழியாக சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்கப் போகிறேன் என்று அறிவித்திருந்தார். கோயிலை புனரமைக்க பலரும் நிதி உதவி செய்து வந்தனர். மொத்தமாக 34 லட்சம் ரூபாய் வசூல் ஆகியது. இந்த தொகையை அவர் மோசடி செய்து விட்டார் என புகார் அளிக்கப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது விவகாரத்தில் தான் எச்.ராஜா ஆவேப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்து மதத்தினருக்கு ஸ்நேக் பாபுவாக திகழ்கின்றார் என ஆவேசம் பொங்க கூறியிருக்கிறார். எச். ராஜா. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பத்திரிகையாளர்களிடம், எச். ராஜா பேசியுள்ளார். அப்போது தான் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

    மேலும், அவர் பேசுகையில், கடந்த 9 மாதங்களாக கோயில் பணிகளை சரி செய்து முடிக்காமல் இருந்தது அறநிலையத்துறை. இது, அதிகாரிகள் செய்த மாபெரும் தவறு. அதிகாரிகள் அதனை செய்யாமல் இருந்ததால் தான், பொதுமக்கள் இப்பணியை கையில் எடுத்தார்கள். தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணம், எந்த பயன்பாட்டுக்காக வசூல் செய்யப்பட்டதோ அந்த பயன்பாட்டுக்காக மட்டும் தான் பயன்படுத்த முடியும். கோயிலை புனரமைப்பதற்கு அனுமதி கேட்டும் இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை. இப்படியான சூழலில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாரிதாஸ், கிஷோர் கே. சாமி மற்றும் கல்யாணராமன் வரிசையில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் எச். ராஜா தெரிவித்திருக்கிறார்.

    தமிழக காவல்துறையில் கடந்த இரண்டே மாதங்களில் 5 லாக்கப் டெத் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த கொலைகாரர்கள் கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து மதத்தினருக்கு ஸ்நேக் பாபுவாக திகழ்கின்றார். அதனால், மக்கள் போராட்டத்தின் மூலமாக அறநிலையத் துறையில் இருந்து, இந்து கோயில்களை மீட்க வேண்டும். இதைத் தவிர இந்துக்களுக்கு வேறு வழி இல்லை என்று தெரிவித்திருக்கிறார். இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைச்சர் சேகபாபு பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

    அதிகரிக்கும் செலவினங்கள்….இன்றைய ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....