Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விக்ரம் திரைப்படம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? - எதிர்ப்பார்ப்பில் திரையுலகம்!

    விக்ரம் திரைப்படம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? – எதிர்ப்பார்ப்பில் திரையுலகம்!

    தற்போதையக் காலக்கட்டத்தில் கோலிவுட் எனப்படும் நம் தமிழ் சினிமா இந்திய அளவில் தமது இடத்தை நிரூபனம் செய்ய வேண்டியுள்ளது. சமீப காலமாக வீழ்ச்சி அடைந்துள்ள தமிழ் சினிமா, எழுச்சிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரையுலகமும், கேஜிஎஃப் திரைப்படம் மூலம் சாண்டல்வுட் எனப்படும் கன்னட திரையுலகமும் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெரும் பேசுபொருள் ஆனது. இரு திரைப்படங்களும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிகழ்வானது, கோலிவுட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் நெருக்கடிக்கு உட்படுத்தியது.

    நம் கோலிவூட்டை ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்ற நிலைக்கு இந்த இரு திரைப்படங்களும் தள்ளியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் சமீபத்திய திரைப்படங்களும் பெரியதாய் சோபிக்கவில்லை. நம் தமிழ் ரசிகர்களுக்கும், நம் தமிழ் சினிமாவை மறக்க ஆரம்பித்துவிட்டனர். 

    அதே சமயம் பல தமிழ் ரசிகர்கள் நம் தமிழ் சினிமா ஒரு நல்ல திரைப்படத்தை, கொண்டாடும்படியான திரைப்படத்தை தந்துவிடாதா என்ற எண்ணம் பரவலாக மக்களிடத்தில் பரவ ஆரம்பித்துவிட்டது. அந்த எண்ணத்தை நிறைவேற்றும் என்று பலரும் நம்பும்படியான திரைப்படம்தான், விக்ரம்!

    உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்ற முக்கியமான நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருப்பதும், மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற மக்களுக்கு பிடித்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருப்பதாலும் விக்ரம் திரைப்படத்தின் மீது மீப்பெரும் எதிர்ப்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

    இயல்பாகவே விக்ரம் திரைப்படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பை, இப்படத்தினைப் பற்றிய அப்டேட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் பாட்டும், ட்ரைலரும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் அவர்களின் இசை நம்பிக்கையத் தர, கிரிஷ் கங்காதரன் அவர்களின் ஒளிப்பதிவு நம்மை ‘வாவ்’ சொல்ல வைத்து விடுகிறது.

    ஒரு பக்கம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு நம் கோலிவுட் கெத்தை நிரூபிக்க வேண்டுமென்று ஒரு பெரிய கூட்டமும், இன்னொரு பக்கம் நம் மக்களுக்கு பிடித்த மாதிரி மிகப்பெரிய வெற்றிப் படத்தை கோலிவுட் தர வேண்டுமென்று ஒரு பெரிய கூட்டமும், நம்பிக்கையும் ஆவலும் ஒருசேர காத்திருக்காங்க. 

    இப்படி காத்திருக்க மக்களுக்கு விக்ரம் விடிவெள்ளியா? விழுந்த இடியா? என்று ஜீன் 3 ஆம் தேதி தெரிந்துவிடும்!

    சென்னையில் இடம்பெறுமா அப்துல்கலாம் சிலை? சென்னை மாநகராட்சியின் பதில் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....