Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒன்றிய அரசில் காலியிடங்கள்: தேர்வு அட்டவணையை வெளியிட்டது எஸ்எஸ்சி

    ஒன்றிய அரசில் காலியிடங்கள்: தேர்வு அட்டவணையை வெளியிட்டது எஸ்எஸ்சி

    ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

    ஒன்றிய அரசில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வு நடத்தி வருகிறது. இதன் படி, அடுத்த ஆண்டு தேர்வுக்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.

    அட்டவணையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

    இந்த அட்டவணையின் படி, ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கான (CGL, Tier-1) அறிவிப்பு, செப்டம்பர் மாதம் 10ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 1ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பெறப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.

    அதுபோல, ஒருங்கிணைந்த மேல்நிலை அளவு தேர்வுக்கான (CHSL, Tier-1) அறிவிப்பு நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்வுக்கு 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.

    Staff Selection Commission
    ஒன்றிய அரசில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை எஸ்எஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

    இளநிலை பொறியாளர் முதல் தாள் தேர்வுக்கான அறிவிப்பு, ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு டிசம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

    காவலர் நிலை பணிகளுக்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் 10ம் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.

    சார் பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும்.

    சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறும்.

    பன்னோக்கு பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும். இந்த தேர்வுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும். இந்த தகவல்கள் எஸ்எஸ்சி வெளியிட்டுள்ள அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.

    இலங்கையில் இருந்து தப்பி ஓடினாரா அதிபர் கோட்டபய ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....