Friday, March 15, 2024
மேலும்
    Homeஅறிவியல்சூரியகிரகணம்: தமிழகத்தில் எப்போது , எங்கெங்கு தெரியும்? மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் என்னென்ன ?

    சூரியகிரகணம்: தமிழகத்தில் எப்போது , எங்கெங்கு தெரியும்? மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் என்னென்ன ?

    இந்த ஆண்டின் முதல் மற்றும் கடைசி சூரியகிரகணம் இன்று மாலை ஏற்பட உள்ள நிலையில் ,இது இந்தியாவில் பகுதி சூரியகிரகணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த சூரிய கிரணகத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய கிரகணம் என்றால் என்ன?

    சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரியனின் ஒளியைத் தடுத்து, பூமியின் மீது நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    அதாவது சூரிய வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது ஏற்படும் நிகழ்வையே முழுமையான சூரிய கிரகணம் என்றும் , பகுதியளவாக மறைக்கும் போது ஏற்படும் நிகழ்வையே பகுதி கிரகணம் என்றும் , சில இடங்களில் நெருப்பு போல் தோன்றும் நிகழ்வையே வளைய சூரிய கிரகணம் என்றும் கூறுகின்றோம் . இந்த சூரிய கிரகணம் அமாவாசை அன்று மட்டுமே நிகழும்.

    அதனால்தான் அமாவாசைநாளான அக்டோபர் 25 -ஆம் தேதியான இன்று ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளில் ஒரு பகுதி சூரியகிரகணம் அல்லது ‘சூர்ய கிரகணம்’ தெரியும். வடகிழக்கு பிராந்தியத்தின் சில மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் சூரிய கிரகணத்தைக் காண முடியும்.

    சூரிய கிரகணத்தை எங்கே பார்ப்பது?

    இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கும் சூரிய கிரகணம் புது டெல்லி, மும்பை, அகமதாபாத், சூரத், புனே, ஜெய்ப்பூர், இந்தூர், தானே, போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜைன் போன்ற நகரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெரியும்.

    மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, சூரத் மற்றும் பனாஜி ,ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, லக்னோ, கான்பூர், நாக்பூர், விசாகப்பட்டினம், பாட்னா, மங்களூரு, கோயம்புத்தூர், ஊட்டி, வாரணாசி மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்கள் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக கிரகணத்தைக் காணும்.

    ஐஸ்வால், திப்ருகார், இம்பால், இட்டாநகர், கோஹிமா, சில்சார் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவு போன்ற வடகிழக்கு பகுதிகள் சூரிய கிரகணத்தை பார்க்கவே முடியாது.

    சூரிய கிரகணத்தின் நேரங்கள் என்ன?

    சூரிய கிரகணம் இந்தியாவில் சூரிய அஸ்தமனத்திற்கு முன், பிற்பகலில் தொடங்கும் என்று புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சூரிய கிரகணத்தின் முடிவை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் எப்போது ,எங்கு சூரிய கிரகணம் ஏற்படும் ?

    தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி, ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.குறிப்பாக சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும் .அதிகபட்சம் 8 சதவிகிதம் மட்டுமே தென்படும். மேலும் சூரியகிரகணம் நிகழும் போது, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரகணம் பின்வரும் நேரங்களில் பின்வரும் பகுதிகளில் தொடங்கும்:

    டெல்லி – மாலை 4.29

    மும்பை – மாலை 4.49

    பெங்களூர் – மாலை 5.12 மணி

    கொல்கத்தா – மாலை 4.52

    சென்னை – மாலை 5.14 மணி

    போபால் – மாலை 4.42

    ஹைதராபாத் – மாலை 4.59

    கன்னியாகுமரி – மாலை 5.32

    சூரிய கிரகணத்தை எப்படி பார்ப்பது?

    சூரியனின் ஒளிக்கோளத்தில் இருந்து அதிக அடர்த்தி கொண்ட கதிர்வீச்சு வரும் என்பதால் அதை நேரடியாக பார்க்கும் போது , நமது விழித்திரைக்கு பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது .இதனால் மக்கள் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதைத் தவிர்ப்பது நலல்து .

    சூரியனை கிரகணத்தின் போதோ, சாதாரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படிச் செய்தால் கண்பார்வையை இழக்க நேரிடும். சூரிய ஒளியை ஒரு சிறிய (5 எம்.எம்) துளையிட்ட அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடிமூலம் இருண்ட அறையில் பாய்ச்சி சூரியன் பிம்பத்தையும் கிரகணத்தையும் காணலாம்.

    அதேபோல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கிரகணத்தின் போது ஹெட்லைட்களை எப்பொழுதும் எரிய வைத்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    பள்ளிகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன :

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு இன்று பொது விடுமுறை அறிவித்தது. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் செவ்வாய்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் சுமார் 12 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். காலை 8:11 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோவில் மூடப்படும் என கோவில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    இதையும் படிங்க: தீபாவளி மட்டும் இல்ல.. அக்.25ல் கண்ணு பத்திரம்.. வருகிறது இந்த ஆண்டின் கடைசி ‘சூரிய கிரகணம்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....