Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி வசூல்! 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையா? முதலிடம் பிடித்த நகர் எது...

    தீபாவளி வசூல்! 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையா? முதலிடம் பிடித்த நகர் எது தெரியுமா?

    தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை எப்போதும் விற்பனையாவதைவிட பன்மடங்கு அதிகரிக்கும். 

    அந்த வகையில், தீபாவளி தினத்தன்று விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டும் முறியடிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி நாளான நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 24) மட்டும் தமிழகம் முழுவதும் 244.08 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 

    கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 708.29 கோடிக்கு மது விற்பனையானது. 

    தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 154 கோடி ரூபாய்க்கும், அதற்கடுத்து திருச்சி மண்டலத்தில் 140 கோடி ரூபாய்க்கும், தொடர்ந்து சேலம் மண்டலத்தில் 142 கோடி ரூபாய்க்கும் இதைத்தொடர்ந்து சென்னை மண்டலத்தில் 139 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 133 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. 

    meme

    இதையும் படிங்க: சூரியகிரகணம்: தமிழகத்தில் எப்போது , எங்கெங்கு தெரியும்? மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள் என்னென்ன ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....