Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'பாம்பு பிடி மன்னன்' வாவா சுரேஷ் உயிருக்கு மீண்டும் ஆபத்து; விபத்தில் சிக்கி மருத்துவமனையில்...

    ‘பாம்பு பிடி மன்னன்’ வாவா சுரேஷ் உயிருக்கு மீண்டும் ஆபத்து; விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி

    கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    கேரள மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ் தனது டிரைவருடன் காரில் செங்கனூர் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கேரள அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

    திருவனந்தபுரம்-கொல்லம் நெடுஞ்சாலையில் தட்டத்து மலை பகுதியில் கவனக் குறைவின் காரணமாக சாலையின் ஓரத்தில் வந்த காரை இடிக்காமல் செல்வதற்காக வாவா சுரேஷ் உடைய டிரைவர் ,தாங்கள் வந்த காரை வளைக்க முயன்றுள்ளார். அப்போது கொல்லத்திலிருந்து திருவனந்தபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு பேருந்து அவர்கள் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலையில் பல கோடி முறைகேடு.. தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

    இந்த விபத்தில் வாவா சுரேஷ் மற்றும் அவரது டிரைவர் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வாவா சுரேஷ் பாம்புகடி காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....