Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைவங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை இருக்குமா? வானிலை மையம் தகவல்

    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை இருக்குமா? வானிலை மையம் தகவல்

    சென்னை: தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது

    இது மேலும் வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னமாக வலுப்பெறும். 

    காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, மதுரை விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    அக்டோபர் 22 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்கஇந்தியாவில் புதிதாக 2,141 பேருக்கு கொரோனா தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....