Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிடுமுறை நாள்களில் வகுப்புகள் எடுக்க கூடாது- பள்ளிக்கல்வித்துறை 

    விடுமுறை நாள்களில் வகுப்புகள் எடுக்க கூடாது- பள்ளிக்கல்வித்துறை 

    விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது, சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இருப்பினும், இதை மீறி சில பள்ளிகளில் விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. 

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது. இதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

    மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது. பள்ளி வேலை நாள்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

    தமிழக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்- கல்வியின் தரத்தை முன்னேற்றுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....