Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவ்வளவு பற்றாக்குறையா?

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவ்வளவு பற்றாக்குறையா?

    மத்திய அரசால் நடத்தப்படும், நாடு முழுவதுமிருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

    பாதுகாப்புத்துறை, துணை ராணுவத்தினர் உள்பட மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருவதுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்.  இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,199 பள்ளிகள் உள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 49 பள்ளிகள் இயங்குகின்றன.

    இம்மாதிரியான பள்ளிகளில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லை என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

    கொரோனா பொது முடக்கம் காரணமாக, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஆசிரியர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது. ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயாக்களில் 12,044 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்தான் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும், 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.  

    அதிகளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவிப்பதாகவும், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இரண்டு பணி நேரங்களிலும் வேலை செய்ய வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    மொத்தமுள்ள 1,247 பள்ளிகளில் 250 பள்ளிகள் இரண்டாம் தர பள்ளிகள். இவற்றுக்கு தலைமை ஆசிரியர்கள் தேவையில்லை. அதற்கு பதிலாக துணை தலைமையாசிரியர் செயல்படுவார். மிச்சமுள்ள 1000 பள்ளிகளில் 450 பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் இல்லை என்கிறது புள்ளிவிவரம்.

    கடைசியாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி கடந்த 2019ஆம் ஆண்டுதான் நடந்துள்ளது. அதன்பிறகு நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்குள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....