Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக - கேரள எல்லைப் பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

    தமிழக – கேரள எல்லைப் பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

    தமிழக – கேரள எல்லைப் பகுதியான அச்சன்கோவில் பகுதியில் காட்டு யானை மிதித்து ஒருவர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லையான அச்சன்கோவிலில் இருந்து புனலூர் செல்லும் சாலை இருபுறமும் வனப் பகுதிகள் நிறைந்து காணப்படும் பகுதியாகும்.  இந்த வழித்தடத்தில் அவ்வப்போது வனவிலங்குகள் வந்து சாலையில் நின்று அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறிப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது. 

    அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை காட்டு யானை ஒன்று தாக்கிய சூழலில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து அந்த வழியாக செல்பவர்கள் கவனமாக செல்ல வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் அச்சன்கோவிலில் இருந்து புனலூர் செல்லும் துரைப்பாலம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடந்து சென்ற நிலையில், அவரை காட்டு யானை விரட்டி சென்று மிதித்து கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், பலியானவர் யார் என்பது குறித்த விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....