Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஏ.ஆர்.ரகுமானுக்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம்.. சந்தோஷத்தில் திக்கு முக்காடிய ரசிகர்கள்

    ஏ.ஆர்.ரகுமானுக்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம்.. சந்தோஷத்தில் திக்கு முக்காடிய ரசிகர்கள்

    கனடாவில் உள்ள மார்கம் நகரில் ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமான் என பெயர் சூட்டப்பட்டதற்கு, ஏ.ஆர்.ரகுமான் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    தென்னிந்திய திரை இசை உலகில் மட்டுமல்ல, வட இந்திய மொழிகளையும் தாண்டி ஹாலிவுட் வரை, இவர் பெயர் சொன்னால் தெரியாத நபர்கள் என்பது யாருமில்லை. அந்த அளவிற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசைப் புகழ் பல நாட்டு எல்லைகளைக் கடந்து வருகிறது.

    இதனிடையே, தற்போது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றுக்கு இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

    இந்நிலையில், கனடாவில் மார்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு இசைப்புயலின் பெயரை அந்நாட்டு அரசு சூட்டியுள்ளது. இதன் காரணமாக, மகிழ்ச்சி அடைந்துள்ள ரகுமான் கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தான் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    சிட்டி ஆஃப் மார்க்கம் பகுதியில் உள்ள தெருவுக்கு தன் பெயரை சூட்டியதன் மூலம், தன் வாழ்நாளில் இதை நினைத்துப் பார்த்ததில்லை.

    கனடாவின் மார்க்கம் மேயர் (ஃபிராங்க் ஸ்கார்பிட்டி) மற்றும் ஆலோசகர்கள், இந்திய துணைத் தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.   

    ஏ.ஆர். ரஹ்மான் என்னுடையவர் அல்ல. அதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கமுள்ளவர் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கடவுளின் குணம். ஒருவர் இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும். 

    எனவே, அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதியையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

    அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் எனக்கு உத்வேகத்தை அளித்தவர்கள். 

    ar rahman street

    மேலும், பலவற்றைச் செய்வதற்கும் உத்வேகமாக இருப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

    சோர்வடையாமல், ஓய்வு பெறாமல் இன்னும் தான் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டி உள்ளது. மேலும் நிறைய மக்களை இணைக்க வேண்டி உள்ளது. 

    இவ்வாறு, ஏ.ஆர்.ரகுமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ar rahman statement

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....