Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதுப்பாக்கிச் சூடு: சிவசேனா கட்சியின் தலைவர் சுதிர் பலி

    துப்பாக்கிச் சூடு: சிவசேனா கட்சியின் தலைவர் சுதிர் பலி

    பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைவர் சுதிர் சூரி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். 

    பஞ்சாப் மாநிலம், அமிர்தரசில் உள்ள ஒரு கோயிலில் சிவசேனா கட்சியின் தலைவர் சுதிர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்தக் கோயிலின் சாமி சிலை ஒன்றை குப்பை தொட்டியில் வீசியதற்காக போராட்டம் நடைபெற்றது. 

    அப்போது சிவசேனா கட்சியின் தலைவர் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அந்தச் சமயம் பார்த்து குடியிருப்பு பகுதியில் இருந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டார். 

    இந்தச் துப்பாக்கி சூடு சம்பத்தில் சுதிர் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தது. இதனால், படுகாயமடைந்த அவர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுதிர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நபரிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 

    இவர் ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு சமூகத்தை பற்றி பேசி வந்ததால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சுடப்பட்டு உயிரிழந்தார். தற்போது இந்தச் சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: இன்னும் ஆட்டமே ஆரம்பம் ஆகல… 9ம் தேதிக்கு மேல பாருங்க…? மழை குறித்து வெதர்மேன் அப்டேட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....