Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஷின்சோ அபேவுக்கு பிரியாவிடை- ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி

    ஷின்சோ அபேவுக்கு பிரியாவிடை- ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி

    ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டின் நாரா எனும் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பொது டெட்சுயா யமாகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்ற டெட்சுயா யமாகாமி, தான் வெறுத்த ஒரு அமைப்புடன் ஷின்சோ அபே தொடர்பில் இருந்ததாக எழுந்த சந்தேகத்தில் அவரை சுட்டுக் கொலை செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.

    ‘யூனிஃபிகேஷன் சர்ச்’ எனப்படும் மத அமைப்புக்கு யமாகாமியின் தாயார் அளித்த நன்கொடையால் குடும்பமே திவாலானதால், அந்த அமைப்பு மீது யமாகாமி வெறுப்பு கொண்டிருந்ததாகவும் ஜப்பான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற டெட்சுயா யமாகாமி, ஒரு முன்னாள் கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 08) பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்ட ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி அன்று மாலையே உயிரிழந்தார். டோக்கியோவுக்கு கொண்டுவரப்பட்ட ஷின்சோ அபேவின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) டோக்கியோவில் உள்ள சொஜோஜி எனும் பௌத்த ஆலயத்தில் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் தப்பியோட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....