Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமணமகன் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்: ஹனிமூனுக்கு இந்த ஊர் செல்கிறார்!

    மணமகன் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்: ஹனிமூனுக்கு இந்த ஊர் செல்கிறார்!

    திருமணம் என்றாலே இருவீட்டாரும் மகிழ்ச்சியோடு இணைந்து கொண்டாடும் ஒரு விழா. மண்ப்பெண் மற்றும் மணமகன் ஆகிய இருவருக்கும் விருப்பம் இருந்தால் மட்டுமே, திருமணம் எனும் இல்லறம் நன்றாக அமையும். இதில், ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றாலும் வாழ்க்கையே தலைகீழாய் மாறி விடும். இப்படியான சூழலில், இளம்பெண் ஒருவர் மணமகன் இல்லாமல் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னைத்தானே வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து, வயது 24. எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமா, வருகின்றன ஜூன் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தனது திருமணத்துக்கு தயாராகி வருகிறார். திருமணத்திற்காக வாங்கப்பட்ட பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து வித சம்பிராதாயங்களும், இவருடைய திருமணத்தில் நடைபெற இருக்கிறது. உறவினர்கள் சிலரையும் தனது திருமணத்தில் பங்கேற்குமாறு இவர் அழைத்துள்ளார். இந்த திருமணத்தில் மணமகன் இல்லையே தவிர, மற்ற அனைத்து வித நிகழ்ச்சிகளும், சம்பிரதாயங்களும் நடைபெறவுள்ளது.

    தனது திருமணம் குறித்து ஷாமா பிந்து கூறுகையில், சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தான் நினைத்திருந்தேன். திருமணம் எனும் பாரம்பரியம் ஏனோ என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இருப்பினும், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணமகனை தவிர்த்து விட்டு, என்னை நானே மணந்து கொள்ள முடிவெடுத்தேன். இது சோலோகேமி என அழைக்கப்பட்டு வருகிறது.

    ஒரு வெப்சீரிஸில் நடிகை ஒருவர், அனைத்துப் பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார். இதைக் கேட்டதும் என்னை நானே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம், எனக்கு மீண்டும் தோன்றியது. இது போல், இந்தியப் பெண்கள் யாரேனும் திருமணம் செய்து கொண்டார்களா என, இணையத்தில் தேடிப் பார்த்த போது, யாருமே அப்படி செய்துகொள்ளவில்லை என்பது தெரிந்தது. திருமணத்தை மிகவும் புனிதமாக கருதும் நம் நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் முதல் பெண்ணாக நான் இருப்பேன் என நினைக்கிறேன்.

    பெண்கள் தாங்கள் விரும்பும் ஒரு ஆண்மகனை திருமணம் செய்து கொள்வார்கள். இந்த திருமணத்தின் மூலமாக என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய தாய் தந்தை இருவரும், இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் இதில் முழு மகிழ்ச்சி தான். எனது திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சி வருகின்றன ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்று ஷாமா பிந்து தெரிவித்துள்ளார்.

    இந்தியால் நடைபெறவிருக்கும் இந்த வித்தியாசமான திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரஙகள், ஷாமா பிந்து ஹனிமூனுக்காக கோவாவுக்கு செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த மாணவனின் தந்தை போலீசில் புகார்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....