Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகள் - ஒரு பார்வை!

    பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகள் – ஒரு பார்வை!

    உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும்.

    நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநல பிரச்சினைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு இது அதிகம். ஹார்மோன்களும், அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.

    பெண்கள் எதிர்கொள்ளும் மனநல பிரச்சினைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்கு காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன. ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாக கருதப்படுகின்றன. எனவே அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவது இல்லை.

    உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னை பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அறிகுறிகளாகும்.

    பசியின்மை பிரச்சினை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருப்பவர்கள், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள். புலிமியா என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சினையாகும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு உடல் எடை கூடுவதை தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள்.

    இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சினைகளில் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாள்பட்ட பிரச்சினை பசியின்மை ஆகும். எனினும், மெலிதாக இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சினை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 71 சதவீத பெண்கள் மன அழுத்தத்திற்கு எந்த சிகிச்சையும் நாடுவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    ஐரோப்பிய இதய இதழில் கடந்த மார்ச்26ம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மன அழுத்த நிகழ்வுகளால் மூளையில் ஏற்படும் அதிகபடியான செயல்பாடு, டகோட்சுபோ நோய்க்குறி (TTS) எனப்படும் அரிய மற்றும் சில நேரங்களில் ஆபத்தான இதய நிலையை உருவாக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    மணமகன் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்: ஹனிமூனுக்கு இந்த ஊர் செல்கிறார்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....