Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்தமிழ்நாடுசிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த மாணவனின் தந்தை போலீசில் புகார்..!!

  சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்த மாணவனின் தந்தை போலீசில் புகார்..!!

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவருக்கு திருமுருகன் மற்றும் கோகுல் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் உள்ளார்.

  இந்நிலையில் கடந்த மே மாதம் 24ம் தேதி தனது நண்பர்களுடன் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள பைவ் ஸ்டார் எலைட் என்கிற ஹோட்டலுக்குச் சென்று சிக்கன் தந்தூரி, ஃபிரைட் ரைஸ் போன்ற உணவுகள் சாப்பிட்டுள்ளார்.

  அன்றைய தினமே உடல்நலம் குன்றிய திருமுருகன், இரவு முழுவதும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளது மட்டுமல்லாது, பலமுறை வாந்தியும் எடுத்துள்ளார்.

  செய்வதறியாது தவித்த பெற்றோர்கள் மறுநாள் காலையில் தங்களது வீட்டிற்கு அருகில் இருந்த தனியருக்குச் சொந்தமான மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் தொடர் வயிற்று வலி மற்றும் வாந்தியினால் மிகவும் சோர்வடைந்துள்ளார் திருமுருகன்.

  இந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயிற்று வலி அதிகமாகவே மீண்டும் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றுள்ளார். அங்கு மருத்துவராய்ப் பணிபுரிந்த மம்தா என்பவர் ஸ்கேன் செய்து பார்க்கையில், உண்ட உணவு விஷமாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

  இதனால் திருமுருகனை அவசர சிகிச்சைக்காக வேலூர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  உயிரிழந்த திருமுருகனை மறுநாளே அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று இந்து முன்னணி கட்சி கோட்டத்துத் தலைவர் மகேஷ் தலைமையில் கட்சியிலிருந்து 50 தொண்டர்கள் மற்றும் இறந்த திருமுருகனின் தந்தை மகேஷ் ஆகியோர் ஆரணி நகர காவல் நிலத்திற்கு வந்து புகார் அளித்துள்ளனர்.

  திருமுருகனின் மரணத்துக்குக் காரணமான பைவ் ஸ்டார் எலைட் உணவகத்தினை மூடுவது மட்டுமல்லாமல், அந்த உணவகத்தின் நிறுவனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

  தனது மகன் இறந்த உடனே அடக்கம் செய்யவேண்டும் என்று அந்த பகுதியினைச் சேர்ந்த திமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தன்னை நிர்பந்தம் செய்தாகவும், இதனால் இவ்வளவு நாட்கள் புகார் அளிக்கமுடியவில்லை எனவும் கூறியுள்ளார். அந்த உணவகமானது முன்னாள் திமுக கவுன்சிலருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் தான் இறக்கப் போவதாக தனது நண்பர்களிடம் பேசிய காணொளிகள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

  ஆரணியில் ஏற்கனவே ஆறு மாதம் முன்பு சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தற்போது 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் தந்தூரி சிக்கென சாப்பிட்டு இறந்துள்ளது அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  தாலி கட்டும் நேரத்தில் காவல்துறை வர, கல்யாணத்தை நிறுத்த….மணமகன் அதிர்ச்சி! -நடந்தது என்ன?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....