Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.சுந்தர் காலமானார்

    மூத்த பத்திரிகையாளர் பி.எஸ்.சுந்தர் காலமானார்

    மூத்த பத்திரிகையாளரும், குன்னூர் நீலகிரி கலாசார சங்கத்தின் தலைவருமான பி.எஸ்.சுந்தர் (68) கடந்த ஜூலை 26-ம் தேதி இரவு இயற்கை எய்தினார். 

    பி.எஸ்.சுந்தர், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். அதோடு, நீலகிரி கலாசார சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். 

    மேலும், பி.எஸ்.சுந்தர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும், கோத்தாரி வேளாண் பயிற்சி மையத்தில் நிரந்தர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக  உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பத்திரிகையாளர் பி.எஸ்.சுந்தர், நேற்று ஜூலை 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 10.50 மணியளவில் காலமானார்.

    இதைத் தொடர்ந்து, இவரது இறுதி சடங்குகள் குன்னூர் ரெய்லி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. பின்னர் வெலிங்டன் ராணுவ வீரர்கள் பயிற்சி மையம் அருகில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....