Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் காலமானார்

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் காலமானார்

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் வில்லியம் டேவிட் டிரிம்பிள் காலமானார். 

    அயர்லாந்தில் 1998-ம் ஆண்டு பெல்பாஃஸ்ட் (belfast agreement) ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட வில்லியம் டேவிட் டிரிம்பிள் முக்கிய காரணமாக இருந்ததால், மக்களால் இவர் ‘சிற்பி’ என்று அழைக்கப்படுகிறார். 

    அயர்லாந்தில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறை காரணமாக 3600 பேர் உயிரிழந்தனர். இதை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த, வில்லியம் டேவிட் டிரிம்பிள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக 1998-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், வில்லியம் டேவிட் டிரிம்பிள் (வயது 77) காலமானார் என்பதை அவரின் குடும்பத்தினர் நேற்று (ஜூலை 26) உறுதிப்படுத்தினர். 

    வில்லியம் டேவிட் டிரிம்பிள் 1998 முதல் 2002-ம் ஆண்டு வரை வடக்கு அயர்லாந்து நாட்டின் முதல் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இன்று கார்கில் போர் வெற்றி தினம்- தலைவணங்கினார் இந்திய குடியரசுத் தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....