Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமத்திய அரசு எதிர்த்த நிலையில், ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்த வழக்கறிஞரை நீதிபதியாக்க உச்ச நீதிமன்றம்...

    மத்திய அரசு எதிர்த்த நிலையில், ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்த வழக்கறிஞரை நீதிபதியாக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிந்துரை..

    ‘நான் ஓரினச் சேர்க்கையாளர்’ என வெளிப்படையாக தெரிவித்த மூத்த வழக்கறிஞர் சௌரவ் கிர்பாலை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

    சௌரவ் கிர்பால் – முத்த வழக்கறிஞரான இவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.கிர்பாலின் மகன். இவர் தன்னை வெளிப்படையாக ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்தார். மூத்த வழக்கறிஞர் என்று கூறப்பட்டாலும், இவருக்கு பதவி உயர்வு எதுவும் கிட்டப்படவில்லை. இந்நிலையில், எனக்கு பதவி உயர்வு அளிக்கப்படாததற்கு காரணம் நான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதுதான் என்று இவர் தெரிவித்தார். 

    இது மிகப்பெரிய சர்ச்சையானது. இதனிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற கொலீஜியம் சௌரவ் கிர்பாலை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 

    ஆனால், மத்திய அரசு பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றத்துக்கு திருப்பி அனுப்பியது. இச்சூழலில், தற்போது மூத்த வழக்கறிஞர் சௌரவ் கிர்பாலை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. 

    மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய சொல்லிய காரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 

    உளவுத் தகவல்களின் அடிப்படையில் வழக்கறிஞர் சௌரவ் கிர்பாலின் நியமனத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், அவர் தன் பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகத் தெரிவித்ததும் அவரின் துணைவர் ஸ்விட்சர்லாந்து குடியுரிமை பெற்றவராக இருப்பதும் எதிர்ப்புக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாலின ஈர்ப்பு குறித்த விவரத்தை சௌரவ் கிர்பால் வெளிப்படையாகத் தெரிவித்தது வரவேற்புக்கு உரியதே. பாலின ஈர்ப்பு குறித்து எதையும் மூடி மறைக்காமல் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வே தெரிவித்துள்ளது.

    சௌரவின் துணைவர் இந்தியாவின் நட்பு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மூலமாக தேசப் பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தலும் காணப்படவில்லை. இந்தியாவில் உயர் பதவிகளில் வகித்த பலர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்துள்ளனர்.

    அவற்றைக் கருத்தில்கொண்டு சௌரவை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைக்கிறது. திறமையும் அனுபவமும் கொண்டுள்ள சௌரவின் நியமனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் பன்முகத்தன்மையை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....