Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..

    ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..

    பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாசிம் ஆம்லா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    உலகளவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் ஆம்லா. 39 வயதாகும் இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடினார். 

    இதுவரையில், தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்டுகள், 181 ஒருநாள், 44 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடிய ஆம்லா 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படியே ஒய்வும் பெற்றார். 

    இருப்பினும், இருபது ஓவர் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார். இந்நிலையில், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக ஆம்லா அறிவித்துள்ளார். 

    பயிற்சியாளராகப் பணிபுரிய விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது,  எஸ்ஏ 20 போட்டியில் எம்ஐ கேப் டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆம்லா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

    ‘இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா…. நீங்க இத செய்வீங்களா?’ – சமுத்திரக்கனி படத்தின் டீசர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....