Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'சிறந்த மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும்' - புதுச்சேரி முதல்வர் பேச்சு!

    ‘சிறந்த மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும்’ – புதுச்சேரி முதல்வர் பேச்சு!

    புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற இன்று வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு கட்டிடம் கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதி அரசர் (பொறுப்பு) ராஜா, முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் புதுச்சேரிக்கான பொறுப்பு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வ கணபதி மற்றும் புதுச்சேரி நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சிறிய பள்ளியில் தொடங்கப்பட்ட சட்டக்கல்லூரி தற்போது பெரிய வளாகத்தில் இயங்கி வருகிறது என்றும், அந்த கல்லூரி விரைவில் சட்டப்பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்று கூறினார்.

    மேலும், தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் கட்டிட பணிகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்த அவர், வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவர்கள் அடங்கிய சிறிய மருத்துவமனை ஒன்று நீதிமன்ற வளாகத்தில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

    அத்துடன், வழக்கறிஞர்களை தேடி வரும் வழக்காளிகளுக்கு விரைந்து நீதி கிடைக்க வழக்கறிஞர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் வலியுறுத்தி உள்ளேன், புதுச்சேரி மாநில தகுதி பெறுவதற்கான ஆலோசனைகளை நீதிமன்ற நீதிபதிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும் ஒரு சிறந்த மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என்று குறிப்பிட்ட அவர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; ஓபிஎஸ் தரப்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....