Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்..! தைரியத்துடன் புரோமஷனில் களமிறங்கும் சமந்தா...

    விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்..! தைரியத்துடன் புரோமஷனில் களமிறங்கும் சமந்தா…

    உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சமந்தா தற்போது யசோதா திரைப்படத்தின் புரோமஷனுக்கு தயாராகியுள்ளார். 

    தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா.இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

    இவர் நடிப்பில் தற்போது ‘யசோதா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ‘சில மாதங்களுக்கு முன்பு நான் மயோசிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய்க்கு உள்ளாகியுள்ளேன்’ என்று கூறி ரசிகர்களை பதறவைத்தார், சமந்தா. விரைவில் குணமடைந்துவிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இச்சூழலில், சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வருகின்ற 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆனால், இதுவரை திரைப்படம் சார்ந்து பெரிய புரோமஷன்கள் எதுவும் நிகழவில்லை. இந்நிலையில், ‘எவ்வளவு கடுமையான நாட்களாக இருந்தாலும், நம்மை நாம் வெளிக்காட்ட வேண்டும் என்று என் நண்பன் கூறியதை இப்போது நான் கடன் வாங்கிக்கொள்கிறேன். தற்போது, யசோதா புரோமஷனுக்கு நான் தயார். நவம்பர் 11 திரையரங்குகளில் சந்திப்போம்’ என்று தனது ட்விட்டில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

    இவரின் இந்த ட்விட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, யசோதா திரைப்படத்திற்கு  கையில் ட்ரிப்ஸை ஏற்றிக்கொண்டு, டப்பிங் செய்தபடி இருந்த சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: விண்வெளியில் குழந்தை பிறக்குமா? குரங்குகளை வைத்து சீனா போட்டுள்ள புதிய திட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....