Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நாக சைதன்யாவின் காதல் விவகாரம்; கடுப்பில் சமந்தா செய்த ட்வீட்!

    நாக சைதன்யாவின் காதல் விவகாரம்; கடுப்பில் சமந்தா செய்த ட்வீட்!

    வதந்திகளால் கடுப்பான சமந்தா ட்விட்டர் பதிவில் இரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். 

    நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். பின்பு சில காலத்திலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சமரசமாக தங்களது பிரிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். பின்னர் விவாகரத்தும் பெற்றனர். இவர்கள் குறித்து அப்போதும் சரி இப்போதும் சரி அவ்வப்போது வதந்திகள் வருவது வழக்கம். 

    இந்நிலையில், நடிகை சமந்தாவின் முன்னாள் காதலரும் கணவருமான நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையுடன் காதல் டேட்டிங்கில் இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு சமந்தாவும் அவரது பி.ஆர் குழுவும்தான் காரணம் என்று நாக சைதன்யாவின் இரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, நாக சைத்தன்யாவை பற்றி வதந்தி பரப்பியதாக சமந்தாவை இரசிகர்கள் ஏதேதோ பேசி இருக்கிறார்கள்.

    இதில் கடுப்பான நடிகை சமந்தா, ‘உங்க வேலைய நீங்க பாருங்க’ என்பது போல் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.   

    பெண் குறித்த வதந்திகள்- நிச்சயம் உண்மையாக இருக்க வேண்டும்!!

    ஆண் குறித்த வதந்திகள்- பெண்ணால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்!!

    வளருங்கள் தோழர்களே..

    சம்பந்தப்பட்ட தரப்புகள் தெளிவாக நகர்ந்துள்ளன.

    நீங்களும் கட்டாயம் நகர்ந்து செல்லுங்கள்..

    உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்

    குடும்பத்தை பாருங்கள்..

    செல்லுங்கள்!! என்று சமந்தா பதிவிட்டுள்ளார். 

    சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளமெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது.

    நிஜ வாழ்க்கையில் காத்து வாக்குல ரெண்டு காதல்; வாலிபர் செய்த செயல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....