Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்துப்பாக்கி வகை நாயினம் இதுதானாம்; காக்கர் ஸ்பானியல் ஸ்பெஷல்!

    துப்பாக்கி வகை நாயினம் இதுதானாம்; காக்கர் ஸ்பானியல் ஸ்பெஷல்!

    காக்கர் ஸ்பானியல் வகை நாய்கள் ஒரு கன் வகை அதாவது துப்பாக்கி வகை நாயினத்தை சார்ந்த நாயினம் ஆகும். நாயினங்களில் அதிகளவு குட்டி ஈனும் இனங்களில் இந்தவகை நாயினங்களும் ஒன்று ஆகும். காக்கர் ஸ்பானியல் வகை நாயினங்கள் மிகவும் சுறுசுறுப்பான விளையாட்டு நாய்கள் ஆகும்.

    இந்த வகை நாய்களின் பூர்விகம், ஆங்கில காக்கர் ஃபீல்ட் ஸ்பானியல் மற்றும் ஆங்கில ஸ்ப்ரிங்கர் ஸ்பானியல் நாயினங்கள் அறியப்படுகின்றன. இவை தங்களது வாழ்நாளில் 3 முதல் 12 குட்டிகள் வரை ஈனலாம்.

    சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய கலை மற்றும் இலக்கியக் குறிப்புக்களில் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்கள் காணப்படுகின்றன. ஆரம்பகாலக் கட்டங்களில் இதை வகை நாய்கள் நிலம் சார்ந்த ஸ்பேனியல்கள் மற்றும் நீர் சார்ந்த ஸ்பானியல்கள் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.

    பிற்காலங்களில் நிலம் சார்ந்த காக்கர் ஸ்பானியல் வகை நாய்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டு, பின்பு அவற்றின் எடைகளுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டன. 1840 ஆம் ஆண்டு வெளிவந்த உள்ளூர் விளையாட்டு இதழ்களின் கூற்றுப்படி, இந்த வகை நாயினங்கள் 5.5 முதல் 9 கிலோகிராம் வரை இருந்துள்ளன. ஆனால், தற்பொழுது உள்ள நாய் வகைகள் அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. சிறிய பொம்மை அளவில் இருந்து பெரிய அளவிலும் நாய்கள் காணப்படுகின்றன.

    ஆங்கில காக்கர் ஸ்பானியல் நன்கு உறுதியான ஒரு சமநிலையான நாய் ஆகும். இவை மிகவும் புத்திசாலித்தனமாகவும், அதீத விழிப்புணர்வுடனும் இருக்கக்கூடிய நாய் இனங்கள் ஆகும். இந்த வகை நாயினங்களின் வால்கள் பொதுவாக வடஅமெரிக்க பகுதிகளில் நறுக்கப்பட்டு காணப்படுகின்றன. ஆனால், இத்தகைய நடைமுறை ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் காணப்படும் காக்கர் ஸ்பானியல் வகை நாய்கள் வாலுடன் தான் காணப்படுகின்றன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஒருசில சிறப்பு அனுமதி பெற்ற நாய்களுக்கு மட்டும் இந்த வாலை வெட்டிவிடும் முறைக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

    இந்த வகை நாய் இனங்களில் ஆண் நாய்கள் 15.5 முதல் 16 இன்ச் அதாவது 39 முதல் 41 சென்டி மீட்டர் அளவிலும், பெண் நாய்கள் அளவில் ஆண் நாய்களை விட சிறிதாக 13.5 முதல் 14.5 அளவில் அதாவது 34 முதல் 37 சென்டி மீட்டர் அளவில் காணப்படும். ஆங்கில ஸ்ப்ரிங்கர் ஸ்பானியல்ஸ் நாய்கள் தான் காக்கர் ஸ்பானியல்ஸ் வகை நாய்களில் மிகவும் பெரிய அளவில் காணப்படுபவை.

    மேலும், இவை கருப்பு, வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களிலும் மற்றும் இவை அனைத்தும் கலந்த நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த வகை நாய்கள் 12 முதல் 15 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. இந்த வகை நாய்களுக்கு பெரும்பாலும் மரணம் கேன்சர், வயது முதிர்வு மற்றும் இதயநோய் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவைகளுக்கு உடல்நலக்கோளாறுகள் பெரும்பாலும் பற்களில் ஏற்படும் பிரச்சினை, தோல் வியாதிகளால் தான் ஏற்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....