Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாயோகியை எதிர்க்கத் தாயாராகும் அகிலேஷ் யாதவ் : எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்

    யோகியை எதிர்க்கத் தாயாராகும் அகிலேஷ் யாதவ் : எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்

    உத்தர பிரதேசத் தேர்தலில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ், தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். 

    நடந்து முடிந்த 2022க்கான உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 402 தொகுதிகளை உடைய உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் 255 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. அடுத்ததாக, 111 தொகுதிகளில் வெற்றி பெற்று அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி எதிர்க் கட்சியாக மாறியது. அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கார்கல் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் எஸ்பி சிங் பஹல்லை 60,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ வாகத் தேர்வாகி உள்ளார். 

    இதற்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள அசாம்கர் தொகுதியில் போட்டியிட்டிருந்த அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்று லோக்சபா எம்பியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிந்தார். ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில பதவிகளில் இருக்க முடியாது என்பதால் நேற்று தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் லோக்சபாவில் சமாஜ்வாதி கட்சி எம்பிக்களின் எண்ணிகை நான்காகக் குறைந்துள்ளது. இதற்காக நேற்று சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்த அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் முதல்வராக இருந்தபோது நடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 402 தொகுதிகளில் 312 இடங்களைக் கைப்பற்றி யோகி ஆதித்யநாத் முதல்வரானார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் பாஜக அரசு 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, பாஜகவை 2027 சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பதவியேற்க முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் தான் தன்னுடைய எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    2017 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தங்களுடைய தனிப்பெரும்பான்மையை நிருபித்திருந்த பாஜக அரசு, வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகள் ஆகியவற்றால் இந்த தேர்தலில் சிறிதளவு சறுக்கியுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 2027 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....