Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புவெயில் காலத்துல இப்படி சுவையா ஜில்லுனு ஃப்ரூட் கஸ்டர்ட் செஞ்சி சாப்பிடுங்க!

    வெயில் காலத்துல இப்படி சுவையா ஜில்லுனு ஃப்ரூட் கஸ்டர்ட் செஞ்சி சாப்பிடுங்க!

    ஃப்ரூட் கஸ்டர்ட் ஹோட்டலில் தான் சாப்பிட்டு இருப்பீர்கள், வீட்டிலே மிகவும் எளிமையாக செய்யலாம் வாங்க.

    தேவையான பொருள்கள்:

    • பால் – ஒரு லிட்டர் 
    • கஸ்டர்ட் பவுடர் – இரண்டு தேக்கரண்டி 
    • சர்க்கரை- 5 மேசைக்கரண்டி 
    • மாம்பழம், மாதுளை, திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு கால் கப் அளவு 
    • ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி 

    செய்முறை:

    • நன்கு திடமான ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைவான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மேலும் பாலை அடிப் பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருப்பது நல்லது. 
    • 15 நிமிடங்கள் கழித்து (கடைகளில் விற்கும் ஃப்ரூட் கஸ்டர்ட் வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது)  ஃப்ரூட் கஸ்டர்ட் பவுடரை அதில் சேர்க்க வேண்டும். நேரடியாகச் சேர்த்தால் கட்டி கட்டியாக வந்துவிடும். ஆகையால் சிறிது தண்ணீர் அல்லது சிறிதளவு பாலுடன் சேர்த்து தனியாக கலந்து வைத்து பிறகு, அந்தக் காய்ந்த பாலில் சேர்த்தால் நன்றாக வரும். இதனுடன் சர்க்கரையும் சேர்த்து கலக்க வேண்டும். 
    • 10 நிமிடங்கள் நன்றாக கலந்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கஸ்டர்ட் பாலை ஆற வைக்க வேண்டும்.
    • பின்பு சிறிது நேரம் கழித்து பால் நன்றாக ஆறியவுடன், அரிந்து வைத்த சுவையான பழங்களை அதில் ஒவ்வொன்றாக சேர்த்து வர வேண்டும். ஏலக்காய்த்தூள் தூவி, இதனை இப்படியே பரிமாறலாம். ( இதில் குறிப்பிட்ட பழங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு எது விருப்பமோ அல்லது எந்தப் பழங்கள் வீட்டில் உள்ளதோ அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் என்றால் சிறிது தேனும் விட்டு சாப்பிட்டால் இன்னும் சுவைக் கூடும்.) 
    • அல்லது வெயில் காலங்களில் குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பிறகும் பரிமாறலாம். சுவையான  ஃப்ரூட் கஸ்டர்ட் செய்து சுவைத்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்பதைச் சொல்லுங்கள்!

    சத்து: பாலில் கால்சியம் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு அவ்வப்போது இப்படி சுவையாக செய்துக் கொடுப்பது நல்லது. சிலக் குழந்தைகள் எல்லா பழங்களையும் உண்ண மாட்டார்கள் அவர்களுக்கு இப்படிச் சுவையாக செய்து கொடுத்தால் தெரியாது. பழங்களில் நிறைய வைட்டமின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....