Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகும் திமுக ஹாஷ்டாக்! - விருதுநகர் சம்பவம்

    சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகும் திமுக ஹாஷ்டாக்! – விருதுநகர் சம்பவம்

    விருதுநகரில் கடந்த எட்டு மாதங்களாக பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய திமுக பிரமுகர்கள் உள்பட எட்டு பேரை காவல் துறையினர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். 

    விருதுநகரில் 22 வயது இளம் பெண் தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்து வந்திருக்கிறார். அங்கு வரும் திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காதலிப்பதாக ஹரிஹரன் அந்தப் பெண்ணை ஏமாற்றி, அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகி உள்ளார். மேலும் அந்த பெண்ணை ஆபாசமாகவும் படம் பிடித்து வைத்துக் கொண்டு தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இதில் மூன்று பேர் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    மேலும் இந்தப் பெண்ணிடம், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப் போவதாகவும், அந்தப் பெண் வீட்டில் காண்பிக்கப் போவதாகவும்  அவரின் நண்பர்களும் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், மாடசாமி என்ற நபரின் உதவியை நாடியிருக்கிறார். அந்தப் பெண்ணின் சூழலை நன்கு புரிந்த மாடசாமி,தனது ஆசைக்கும் இணங்க வேண்டும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப் போவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இவர்கள் 8 பேர் தொல்லைத் தாங்க முடியாத அந்தப் பெண், காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் கடந்த திங்கட்கிழமை திமுக பிரமுகர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 8 பேரையும் கைது செய்துள்ளனர். நான்கு பேரை காவல் நீதிமன்றத்திலும் சிறுவர்களை சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைக்கப்படும் முன்பு மதுரையில் உள்ள கண்காணிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு சமூகநலத் துறை சார்பில் உளவியல் ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தச் சம்பவம் வெளிவந்ததை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் #savegirlsfromdmk என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மக்கள் பலரும் இதைப்பற்றி பேசத் தொடங்கி வருகின்றனர். கைது செய்தால் மட்டும் போதாது கொடூர தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

    மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....