Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர் கொலை..

    ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர் கொலை..

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஆன்ட்ரி போடிகோவ். இவருக்கு வயது 47. கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. 

    கொரோனா பேரிடர் காலத்தில் ரஷ்ய நாட்டுக்காக ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த 18 விஞ்ஞானிகளில் ஆன்ட்ரி போடிகோவும் ஒருவர் ஆவார். இவர் கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் சூழலியல் மற்றும் காந்தவியல் துறையின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் குடியிருந்த இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பெல்ட்டால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டு நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், போடிகோவுக்கும் 29 வயது இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளைஞர், போடிகோவை பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. 

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தன்னையே கலாய்த்துக்கொண்ட வாரிசு பட தயாரிப்பாளர்; வீடியோ வைரல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....