Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தன்னையே கலாய்த்துக்கொண்ட வாரிசு பட தயாரிப்பாளர்; வீடியோ வைரல்!

    தன்னையே கலாய்த்துக்கொண்ட வாரிசு பட தயாரிப்பாளர்; வீடியோ வைரல்!

    தான் பேசியதையே கலாய்த்து ‘பாலகம்’ என்ற படவிழாவின் வாரிசு படத்தயாரிப்பாளர் தில்ராஜூ பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது அமேசான் பிரைம் தளத்தில் வாரிசு படம் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார். 

    இவர் வாரிசு படத்தின் இசை வெளியீட்டின் போது பேசியது வைரலானது. அந்த விழாவில், “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா அதுவும் இருக்கு” என தில் ராஜூ பேசியது படத்துக்கு வந்த வரவேற்பை விட அதிகளவில் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் தில் ராஜு பாணியை மீம் டெம்ப்ளேட்டாகவே உருவாக்கி தினந்தோறும் விதவிதமான மீம்களையும் நெட்டிசன்கள் பறக்கவிட்டு வருகிறார்கள்.

    ஒருகட்டத்தில் தயாரிப்பாளரை ட்ரோல் மெட்டீரியலாகவே இணையவாசிகள் மாற்றிவிட்டார்கள். இந்த ட்ரோலை தில் ராஜூ காமெடியாகவே எடுத்துக்கொண்டார்.

    இந்நிலையில், புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள பாலகம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று கடந்த பிப்ரவரி 28ம் தேதி தெலங்கனாவில் நடந்தது. இந்த படத்தையும் தில் ராஜூவே தயாரித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது வாரிசு பட விழாவின் போது தான் பேசியதையே கலாய்த்து தில்ராஜூ பேசியுள்ளார். 

     அதில், “தமிழ்நாட்டுல என்னோட பேச்சு ரொம்ப பிரபலமாகிருக்கு. இந்த படத்துல ஃபைட்ஸ் இல்ல, இந்த படத்துல டான்ஸ் இல்ல, இந்த படத்துல விஜய் சாரோட பாடி லேங்வெஜ் இல்ல, ஆனா, இந்த படத்துல சூப்பர் என்டெர்டெயின்மென்ட் இருக்கு, சூப்பர் எமோஷன்ஸ் இருக்கு, சூப்பர் தெலங்கனா நேட்டிவிட்டி இருக்கு, இது நம்ம மனசுக்கு பிடிச்சமான சினிமா. இத மட்டும் சொல்லிக்கிறேன். நன்றி.” என தில் ராஜூ தெரிவித்திருந்தார். இது சம்பந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘லால்-சலாம்’.. படப்பிடிப்பு எப்போது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....