Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்"அணுசக்தியை நாடக்கூடாது" - ரஷ்ய பாதுகாப்புத்‌ துறையிடம் ராஜ்நாத் சிங் பேச்சு..

    “அணுசக்தியை நாடக்கூடாது” – ரஷ்ய பாதுகாப்புத்‌ துறையிடம் ராஜ்நாத் சிங் பேச்சு..

    ரஷ்ய – உக்ரைன் போரினை பேச்சுவார்த்தை மூலம்‌ தீர்வு காண வேண்டும்‌ என்று இந்தியாவின்‌ நிலைபாட்டை மீண்டும்‌ ராஜ்நாத்‌ சிங்‌ வலியுறுத்தினார்‌. 

    ரஷ்யா – உக்ரைன்‌ இடையேயான போர்‌ 8 மாதங்களை கடந்துள்ள நிலையில்‌, உக்ரைன்‌ மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ ராஜ்நாத்‌ சிங்குடன்‌ ரஷ்ய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ செர்கேய்‌ ஷாய்கு தொலைபேசியில்‌ பேச்சுவார்த்தை நடத்தினார்‌.

    இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம்‌ வெளியிட்ட செய்தியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    ரஷ்யாவின்‌ பாதுகாப்பு அமைச்சர்‌ செர்கேய்‌ ஷாய்கு, இந்திய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ ராஜ்நாத்‌ சிங்குடன்‌ தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு இன்று உரையாடினார்‌. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும்‌

    உக்ரைனில்‌ மோசமடைந்து வரும்‌ நிலைமை குறித்து இரு அமைச்சர்களும்‌ விவாதித்தனர்‌. உக்ரைனில்‌ நிலவும்‌ சூழல்‌ குறித்து இந்திய பாதுகாப்புத்‌ துறை அமைச்சருக்கு ரஷிய அமைச்சர்‌ விளக்கினார்‌.

    இரு நாட்டிற்கிடையே மோதலை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம்‌ தீர்வு காண வேண்டும்‌ என்று இந்தியாவின்‌ நிலைபாட்டை மீண்டும்‌ ராஜ்நாத்‌ சிங்‌ வலியுறுத்தினார்‌. அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மனித குலத்தின்‌ அடிப்படைக்‌ கொள்கைகளுக்கு எதிரானது என்பதால்‌ அணுசக்தியை நாடக்கூடாது என்றும்‌ கூறினார்‌.

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: 1 ரன்னில் பாகிஸ்தானுக்கு வந்த சோதனை ! இருபது ஓவர் உலகக்கோப்பையில் அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....