Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எம்.ஜி.ஆர். போன போதே கவலைப்படவில்லை! திமுக 'தேம்ஸ் நதி' மாதிரி - ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    எம்.ஜி.ஆர். போன போதே கவலைப்படவில்லை! திமுக ‘தேம்ஸ் நதி’ மாதிரி – ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    திமுகவில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கட்சியின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். ஆளுங்கட்சி அந்தஸ்தில் இருக்கும் ஒரு கட்சியில் இருந்து, ஒருவர் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கேள்விக்கு, தடாலடியாக பதில் கூறியுள்ளார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
    திமுகவிலிருந்து யார் எங்கு போனாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். “வைகோவை தூக்கி எறிந்தோம்; எம்ஜிஆர் போன போதும் கவலைப்படவில்லை” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் ஆர்.எஸ். பாரதி.
    எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமனின் தந்தை, இந்திரனின் திருவுருவப்பட திறப்பு விழா நிகழ்ச்சி சென்னையில், ஆவடி அடுத்துள்ள திருநின்றவூரில் நடந்தது.
    இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்களான ஆவடி சாமு நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு,  தயாநிதி மாறன் எம்பி மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
    நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு முதலில் தடை விதித்த தமிழ்நாடு அரசு, பின்னர் தடையை நீக்கியதற்காக ஆன்மீக அரசு என்று ஆதீனங்கள் சொன்னது குறித்து கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். பல்லக்கு அனுமதி விஷயத்தில் எது நியாயமோ, எது ஏற்றதோ, எதை சமுதாயம் ஏற்குமோ அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்திருக்கிறார் என்று ஆர்.எஸ். பாரதி பதில் அளித்தார்.
    திமுக கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த திருச்சி சிவாவின் மகன்  சூர்யா சிவா, பல்வேறு குற்றச்சாட்டுகளை கட்சி மேலிடத்தில் முன்வைத்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு, அவர் அதிகமாக குற்றம் சாட்டும் நபர் சசிகலா புஷ்பா. அதே சசிகலா புஷ்பா தான் தற்போது, பாஜகவில் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார்.  இதைப்பற்றி மேலும் சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை என்றார்.
    பாரம்பரிய கட்சியான திமுகவிலிருந்து ஒருவர், எதிரணியாக இருக்கும் பாஜகவிற்கு சென்று விட்டாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “எம்ஜிஆர் கட்சியை விட்டு போனபோதே கவலைப்படவில்லை; வைகோவை தூக்கி எறிந்தோம்” என்று பதலளித்தவர்,  ” திமுக கட்சி தேம்ஸ் நதி மாதிரி. யார் வந்தாலும், யார் போனாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்போம்.  தேம்ஸ் நதி போல 70 வருடங்கள் திமுக ஓடிக் கொண்டே இருக்கிறது. இன்னும் நூறு ஆண்டுகள் ஓடும்” என்று ஆர்.எஸ். பாரதி பதிலளித்தார்.
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....