Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுWWE-இல் கலக்கும் இந்தியர்; ரிங்கு சிங், வீர் மஹான் ஆன கதை!

    WWE-இல் கலக்கும் இந்தியர்; ரிங்கு சிங், வீர் மஹான் ஆன கதை!

    அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு நடைபெறும் உலக மல்யுத்த போட்டிகளுக்கு (WWE)  ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்தப் போட்டிகள், சிறந்த கதைக்களத்திற்காகவும், விறுவிருப்பான சண்டைக்கட்சிகளுக்காகவும், விளையாட்டில் பங்குபெறும் வீரர்களின் அற்புதமான திறமைக்காகவும் பல கோடி மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

    ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வளம் வரும் தி ராக், ஜான் சீனா, டேவ் பட்டீஸ்டா போன்றோர் தங்களது வாழ்க்கையினை இந்த மல்யுத்த நிகழ்ச்சியிலிருந்தே தொடங்கியுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது தி அண்டர்டேக்கர், ராண்டி ஆர்டன், த்ரிபில் ஹெச், ஸ்டோன் கோல்ட் போன்றோருக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

    சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் அதிகம் பேசப்படும் நபர்களாக இவர்கள் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த உலக மல்யுத்த நிகழ்ச்சியானது, முப்பது மொழிகளில் ஒரு பில்லியன் வீடுகளில் பார்க்கப்படுகிறது.

    இவ்வளவு பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் அவ்வப்பொழுது இந்திய வீரர்களும் பங்குபெறும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. உயரமான தி கிரேட் காளி, எளிதில் வெல்ல முடியாத அண்டர்டேக்கரை தனது முதல் போட்டியில் வென்றதில் ஆரம்பித்து, ஜிந்தர் மஹால் மல்யுத்த சாம்பியன்ஷிப் வென்றது வரை என இந்திய வீரர்களின் சாதனை விரவிக்கிடக்கிறது.

    WWE-ல் இந்திய வீரர் :

    அந்த வகையில் தற்பொழுது வீர் மஹான் என்ற புனைப் பெயருடன் ரிங்கு சிங்க் எனும் இந்திய வீரர் இந்நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார். 33 வயதாகும் ரிங்கு சிங், 1988ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோபிக்கஞ் என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர்.

    சிறு வயது முதலே வறுமையில் உழன்ற ரிங்கு சிங், ஒரு ஈட்டி எறியும் வீரராய்த் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மில்லியன் டாலர் ஆர்ம் என்னும் பேஸ்பால் எரியும் நேரலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ரிங்கு சிங்கிற்கு பேஸ்பால் என்றால் என்னவென்றே தெரியாது.

    அந்நிகழ்ச்சியானது அமெரிக்காவின் மிகத்துல்லியமான மற்றும் மிக வேகமாக பேஸ்பால் எரியும் வீரரைக் கண்டறியும் பொருட்டு நடத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் 37000 பேரைத் தோற்கடித்து முதல் பரிசை வென்றார் ரிங்கு சிங்க்.

    இப்போட்டியில் அவர் எறிந்த பந்தின் வேகம் மணிக்கு 87 மைல் ஆகும். இந்த வெற்றியின் மூலம் பேஸ்பால் விளையாட்டிற்குள் நுழைந்த ரிங்கு சிங்க், பேஸ்பாலில் பங்கு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இவரது வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.

    2018ம் ஆண்டு ரிங்கு சிங், உலக மல்யுத்த நிகழ்ச்சியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் மல்யுத்த நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

    சில மதங்களாய் இவரின் மல்யுத்தப் ப்ரவேசத்தினைப் பற்றி விளம்பரங்கள் வந்த நிலையில், இறுதியாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி தனது முதல் மல்யுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்று வரை வெல்ல முடியாத நபராய் வளம் வருகிறார் ரிங்கு சிங்.

    ‘ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்து, இந்தியாவிற்காக உலக அரங்கில் பங்கேற்க வேண்டும் என்பது எனது நிறைவேற கனவாய் இருந்தது. இப்பொழுது அக்கனவினை உலக மல்யுத்த நிகழ்ச்சியானது (WWE) நிறைவேற்றியுள்ளது’ என்று கூறியுள்ளார் அம்மா என்று மார்பில் பச்சை குத்தப்பட்டு நெற்றியில் பட்டையுடன், வீர் மஹான் எனும் புனைப்பெயருடன் வளம் வரும் ரிங்கு சிங்.

    ‘எந்த நிலைமையில் இருந்தாலும், கனவுகளைத் தேடித் செல்லும் ஒரு மனிதன் இருதியில் வெற்றியடைவான்’ என்னும் கூற்றுக்கு ரிங்கு சிங்கின் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு.

    சும்மா..ஸ்டைலா, கெத்தா முதல் அணியாக ப்ளே ஆஃபிற்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....