Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா ராஜபக்சே? - இந்திய தூதரகம் அளித்த பதில்!

    இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா ராஜபக்சே? – இந்திய தூதரகம் அளித்த பதில்!

    இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலுக்கு, பொருளாதார நெருக்கடி தான் மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே, போராட்டக்காரர்களின் வலியுறுத்தலின் பேரில், தனது பதவியை இராஜினாமா செய்தார்.

    பிறகு, ராஜபக்சேவைச் சேர்ந்த ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தியதன் விளைவால், மகிந்த ராஜபக்சேவின் வீடு பற்றி எரிந்தது. அதோடு மட்டுமல்லாமல், அவரின் தந்தையான டி.ஏ. ராஜபக்சேவின் சிலையும் உடைத்து நொறுக்கப்பட்டது.

    இலங்கை முழுவதும் வன்முறைக் கலவரங்கள் வெடிக்க, மகிந்த ராஜபக்சே தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தாருடன், இந்தியாவில் தஞ்சமடைந்து இருப்பதாக வெளியாகும் செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், இந்த செய்தி அடிப்படையில் ஆதாரமற்றது என்று இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

    ராஜபக்சே குடும்பத்தாருடைய தவறான முடிவுகளே, இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம் எனக் கூறி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கை மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபரான கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவ ஆகிய இருவரும், உடனே பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ராஜபக்சேவுடன் இருந்த அவரது ஆதரவாளர்கள், போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த, அங்கு வன்முறைக் கலவரங்கள் வெடித்தது. மகிந்த ராஜபக்சே, நேற்று முன்தினம் மாலையில் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். மகிந்த ராஜபக்சே வீடு மற்றும் ஆளுங்கட்சியினர் பலருடைய வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இலங்கை முழுவதும் கலவரங்கள் வெடிக்க, அந்நாடே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில், தனது உயிருக்கு பயந்து மகிந்த ராஜபக்சே குடும்பத்தாருடன், திரிகோண மலையில் இருக்கும் கடற்படை தளபதியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அந்த இடத்தையும் கண்டுபிடித்து, போராட்டக்காரர்கள் அங்கும் குவிந்ததால், இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ராஜபக்சே, குடும்பத்தோடு வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், நாட்டை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என, மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    இந்த அசாதாரண சூழலில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தாருடன், இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியன வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இதனை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இது முற்றிலும் மிகவும் தவறான செய்தி என்றும், அடிப்படையில் ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    வெளுத்து வாங்கும் அசானி புயலின் காரணமாக பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....