Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்த ஆண்டு ஒரு சதமும் அடிக்காத ரோஹித் சர்மா..

    இந்த ஆண்டு ஒரு சதமும் அடிக்காத ரோஹித் சர்மா..

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் இந்த வருட விளையாட்டு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு முழுவதும் ரோஹித் சர்மா ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

    இந்த ஆண்டில், ரோஹித் சர்மா 2 டெஸ்ட், 8 ஒருநாள், 29 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதில், டெஸ்ட் போட்டிகளில் 90 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 249 ரன்களும், டி20 போட்டிகளில் 656 ரன்களும் ரோஹித் சர்மா எடுத்துள்ளார். 

    இந்த ஆட்டங்களில் ரோஹித் சர்மா மொத்தமாக 6 அரை சதங்கள் மட்டுமே அடிக்க, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. முன்னதாக, ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக ஜனவரி 2020 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்தார். டி20 கிரிக்கெட்டில் கடைசியாக நவம்பர் 2018-ல் சதமடித்தார். டெஸ்டில் கடந்த வருடம் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராகச் சதமடித்தார்.

    இந்திய பொருளாதரத்தில் யூடியூபர்ஸின் பங்கு ரூ.10,000 கோடி… வெளிவந்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....