Saturday, March 16, 2024
மேலும்
    Homeவானிலைதெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி வலுப்பெற்றது

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி வலுப்பெற்றது

    சென்னை: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    டிசம்பர் 23 மற்றும் 24: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். 

    இந்திய பொருளாதரத்தில் யூடியூபர்ஸின் பங்கு ரூ.10,000 கோடி… வெளிவந்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....